/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்
/
விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்
விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்
விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 31, 2025 11:52 PM
சோமனுார்; 'கோவை, திருப்பூர் மாவட்டத்தில், விசைத்தறி பிரதான தொழில். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக ஒப்பந்தப்படி கூலி உயர்வு கிடைக்காததால், விசைத்தறி தொழில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. கூலி உயர்வு கேட்டு விசைத்தறி யாளர்கள் போராடி வருகின்றனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கோவை மாவட்டம், சோமனூரில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இரு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு பெற்று தர மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நல ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டமைப்பு நிர்வாகி பூபதி கூறியதாவது:
கடந்த, 2014 முதல் ஒப்பந்தப்படி கூலி உயர்வு கிடைப்பதில்லை. 2022ல் போடப்பட்ட ஒப்பந்ததில் இருந்து கூலி குறைத்து வழங்கப்படுகிறது. இதனால், விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 30 சதவீத விசைத்தறிகள் உடைக்கப்பட்டு, காயலான் கடைக்கு போய்விட்டது. அதனால், தொழிலை பாதுகாக்க, ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பேசி கூலி உயர்வு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலியை குறைக்காமல் வழங்க, சட்டபூர்வமான பாதுகாப்பை அமல் படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.