/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசைத்தறியாளர்கள் ஆலோசனை கூட்டம்
/
விசைத்தறியாளர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : மே 13, 2025 10:08 PM
சூலுார்::
கண்ணம்பாளையம் வட்டார கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
கண்ணம்பாளையம் வட்டார நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டம் கண்ணம்பாளையத்தில் நடந்தது. சங்க தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பூபதி, செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர், கூலி உயர்வு ஒப்பந்தம் குறித்து விளக்கி பேசினர்.
புதிய கூலி உயர்வு பெறுவதை உறுதி செய்யும் வகையில், வரவு - செலவு விபரங்கள், பில் விபரங்களை, 16 ம்தேதிக்குள் சங்க தலைமையிடம் அனைத்து விசைத்தறியாளர்களும் அளிக்க வேண்டும், என, அவர்கள் வலியுறுத்தினர். விசைத்தறியாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கண்ணம்பாளையம் சங்க செயலாளர் ஆறுச்சாமி, பொருளாளர் ஸ்ரீதர், துணைத்தலைவர் கிஷோர் மற்றும் விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர்.