/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆவாரம்பாளையத்தில் தொடும் உயரத்தில் மின்ஒயர்கள்; விபரீதம் ஏற்படும் முன் உஷாராகணும் மின்வாரியம்
/
ஆவாரம்பாளையத்தில் தொடும் உயரத்தில் மின்ஒயர்கள்; விபரீதம் ஏற்படும் முன் உஷாராகணும் மின்வாரியம்
ஆவாரம்பாளையத்தில் தொடும் உயரத்தில் மின்ஒயர்கள்; விபரீதம் ஏற்படும் முன் உஷாராகணும் மின்வாரியம்
ஆவாரம்பாளையத்தில் தொடும் உயரத்தில் மின்ஒயர்கள்; விபரீதம் ஏற்படும் முன் உஷாராகணும் மின்வாரியம்
ADDED : செப் 30, 2024 11:37 PM

தெரு விளக்கு எரிவதில்லை
கோவை, 19வது வார்டு கணபதி,சி.எம்.எஸ்., பள்ளி அருகே கடந்த மூன்று மாதங்களாக தெரு விளக்கு எரிவதில்லை. இரவு நேரங்களில், அப்பகுதியில் நடந்து செல்வதற்கே அச்சமாக உள்ளது. இதனை உடனடியாக சரிசெய்து கொடுக்க வேண்டும்.
- மணி, கணபதி
நோய் அபாயம்
டவுன்ஹால், 81வது வார்டு உப்பார வீதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில், குப்பை மலைபோல் குவித்து வைக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- கண்ணன், டவுன்ஹால்.
நடைபாதை சேதம்
போத்தனுார் சர்ச் ரோடு, சர்ச் அருகில் நடைபாதை சேதமடைந்து உள்ளது. வயதானவர்கள் கடும் சிரமப்படும் சூழல் தொடர்கிறது. இதனை சீரமைத்து கொடுக்க வேண்டும்.
- சாந்தி, போத்தனுார்.
மின்விபத்து அபாயம்
கோவை காந்திபுரம் வழியாக, ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் துவக்கத்தில், மின் ஒயர்கள் முழுமையாக மிகவும் தாழ்வாக தொங்கிக்கொண்டு இருக்கிறது. பெரிய வாகனங்கள் செல்லும் போதும், மழைக்காலங்களிலும் பெரிய விபத்து ஏற்படும் முன், இதனை சரிசெய்ய வேண்டும்.
- சுதா, ஆவாரம்பாளையம்.
பணிகளில் தொய்வு
பீளமேடு மாரியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில், காஸ் இணைப்புக்காக குழிகள் சில மாதங்களுக்கு முன் தோண்டப்பட்டது. குழிகள் தோண்டி பல நாட்கள் ஆகியும் பணியை முழுமை பெறாமல் விட்டுள்ளனர். இன்னும் துக்கினார் வீதி சில இடங்களில் இப்பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.
- சுதர்சன், பீளமேடு.
மோசமான சாலைகள்
சாய்பாபா காலனி கே.கே.புதுார் பகுதியில் உள்ள கோவில்மேடு சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எட்டு மாதங்களுக்கு முன் குடிநீர் திட்டப்பணிக்காக சாலையை தோண்டிவிட்டு சரியாக மூடாமல் சென்று விட்டனர். இச்சாலை தடாகம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைகளை இணைக்கும் பிரதான சாலையாகும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில், விபத்து ஏற்படும்முன் சரிசெய்வது அவசியம். கே.கே.புதுார் பகுதியின் பெரும்பாலான சாலைகளின் நிலை படு மோசமாக உள்ளது.
- ஸ்ரீகாந்த், கே.கே.புதுார்.
தரமற்ற பணியால் அவதி
கோவை வார்டு எண், 15ல் பாதாள சாக்கடை பணி கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன், வீடுகளின் கழிவுகள் வெளியேறும் பகுதியை பாதாள சாக்கடை பொது குழாயில் இணைக்கும் பணி நடந்தது. அதில், சிமென்ட் கலவை தரமின்றி பயன்படுத்தப்பட்டு உடனடியாக சேதமடைந்தது. தற்போது, மீண்டும் தரமின்றி போட்டுவிட்டு, கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர். சரியான திட்டமிடலும், கண்காணிப்பும் இல்லை.
- சந்தோஷ், பாலாஜி கார்டன் பிரிவு, ஜி.என்.மில்ஸ்.
துர்நாற்றத்தால் அவஸ்தை
கோவை விளாங்குறிச்சி லட்சுமி நகர் அருகே, வீடுகள் அமைந்துள்ள பகுதியை ஒட்டி சாக்கடை செல்கிறது. இச்சாக்கடையின் நடுவே தனிநபர்கள் பாலம் கட்டி வருகின்றனர். இப்பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க,சாக்கடை ஒரே இடத்தில் தேங்குமாறு செய்துள்ளனர். சிலர் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் அதிகரித்துள்ளது. கொசுக்கள் தொல்லை அதிகரித்து விட்டது.
- செல்வி, விளாங்குறிச்சி.
புதிய ரோடு சேதம்
வெள்ளக்கிணறு சமத்துவபுரம் சாலை, ஆறு மாதங்களுக்கு முன் புதிதாக போடப்பட்டது. அதற்குள், இச்சாலையை மீண்டும் தோண்டி சேதப்படுத்தியுள்ளனர். தோண்டிய இடங்கள் சீர்செய்யப்படவில்லை. புதிதாக போடப்பட்ட சாலையில், பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
-ராஜா, வெள்ளக்கிணறு.
சுத்தம் செய்ய ஆளில்லை
பீளமேடு சவுரிபாளையம் பகுதியில், சாக்கடை சுத்தம் செய்வதற்கு ஆட்கள் வருவதில்லை. பல நாட்களாக குப்பை தேங்கி, சாக்கடை முழுவதும் அடைத்துள்ளது. இதனை சரிசெய்து தரவேண்டும்.
- ஜாபர்,
சவுரிபாளையம்.