/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் குறித்த செயல் விளக்கம்
/
சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் குறித்த செயல் விளக்கம்
சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் குறித்த செயல் விளக்கம்
சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் குறித்த செயல் விளக்கம்
ADDED : மே 21, 2025 12:30 AM

கோவை, ; சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன அமைப்பு பராமரிப்பு குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும், 1,500 விவசாயிகள் பயனடையும் வகையில், சொட்டுநீர் பாசன அமைப்பின் பராமரிப்பு குறித்த செயல் விளக்கம் அளிக்கப்படும் என, அரசு அறிவித்தது.
அதன்படி, கோவை மதுக்கரை, நாச்சிபாளையத்தில் சொட்டுநீர் பாசனம் குறித்த செயல்விளக்கம் நேற்று வழங்கப்பட்டது. செயல் விளக்கத்தில், மாவட்டத்தில் நிலத்தடி நீரின் அளவு குறைந்து கொண்டுள்ளது.
இதைக்கருத்தில் கொண்டு, சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு, 100, பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இதன் வாயிலாக நீர் வீணாவது தடுக்கப்படுகிறது. குறைந்தளவு உரம் பயன்படுத்துவது, களைகளை கட்டுப்படுத்துவது, இதன் வாயிலாக மகசூல் அதிகரிப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.
பயிற்சியில், 30 விவசாயிகள், வேளாண் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.