/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீன் அமில கரைசல் தயாரிக்க பயிற்சி
/
மீன் அமில கரைசல் தயாரிக்க பயிற்சி
ADDED : பிப் 11, 2026 05:28 AM

அன்னூர்: கஞ்சப்பள்ளியில், மீன் அமிலக் கரைசல் தயாரிப்பது குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி நடந்தது.
குமரகுரு வேளாண் கல்லூரி மாணவர்கள், ஊரக வேளாண்மை பயிற்சியின் ஒரு பகுதியாக, கஞ்சப்பள்ளியில், ஒரு தோட்டத்தில், செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
வேளாண் அதிகாரிகள் முன்னிலையில், மீன் அமிலக் கரைசலை தயாரித்தல், அதன் பயன், பயிர்களில் பயன்படுத்தும் முறை குறித்து தெரிவித்தனர். மீன் கழிவுகள் மற்றும் கரும்பு சர்க்கரையை, சம அளவில் ஒரு மண்பானையில் சேர்த்து நன்றாக கலக்கி, 22 நாட்கள் வரை புளிக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலில் இருந்து, 100 மில்லி எடுத்து, 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து பயிர்கள் மீது தெளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
'இந்த கரைசலை பயன்படுத்துவதன் வாயிலாக, பயிர்களின் வளர்ச்சி சீராகவும், வேகமாகவும் இருக்கும். பயிர்கள் நன்கு பச்சை பிடித்து ஆரோக்கியமாக வளரும். மீன் அமிலம், யூரியாவுக்கு மாற்றாக இயற்கை உரமாக பயன்படுத்தப்படுவதுடன், பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தக் கூடியதாகும்,' என தெரிவித்தனர்.

