தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வடகிழக்கு பருவமழை: மக்களுக்கு முன்னெச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை: மக்களுக்கு முன்னெச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை: மக்களுக்கு முன்னெச்சரிக்கை


UPDATED : அக் 12, 2026 05:30 PM

ADDED : அக் 12, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 05:30 PM ADDED : அக் 12, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டும், என, கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மழை பெய்யும் போது, இடி, மின்னல் நேரத்தில், மரம், மின் கம்பம் மற்றும் மின் ஒயர்கள் கீழ் பகுதியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மின்கம்பிகள் அறுந்து கீழே கிடந்தால் அதை தொடக்கூடாது. மேலும், அவ்வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.

கால்வாய்களில் மழை நீர் நிறைந்து செல்லும் போது, குழந்தைகளை அந்த பகுதிக்கு அழைத்து செல்லக்கூடாது. ஆறு குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். நீச்சல் பழகும் போது முறையான பயிற்சி பெற்றவர் உடன் இருக்க வேண்டும்.

வரும் நாட்களில், பள்ளி, கல்லூரிகளில் வடகிழக்கு பருவமழையின் போது, எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, செயல்முறை விளக்கம் அளிக்கப்படும், என, தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us