/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போட்டித்தேர்வுக்கான முதற்கட்ட பயிற்சி; அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்
/
போட்டித்தேர்வுக்கான முதற்கட்ட பயிற்சி; அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்
போட்டித்தேர்வுக்கான முதற்கட்ட பயிற்சி; அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்
போட்டித்தேர்வுக்கான முதற்கட்ட பயிற்சி; அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்
ADDED : அக் 28, 2024 11:33 PM
பொள்ளாச்சி : ஆனைமலையில், உயர்கல்விக்கான போட்டித்தேர்வு எழுத விருப்பம் உள்ள அரசு பள்ளிகளைச்சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக அரசுப் பள்ளிகளில், பிளஸ் 2 பயிலும் மாணவர்களில், உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகள் எழுத விருப்பம் உள்ளவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவ்வகையில் ஆனைமலை ஒன்றியத்தில், ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்கல்வி வழிகாட்டி மையமாக, தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில், மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வாரந்தோறும் சனிக்கிழமை வழங்கப்படுகிறது.
பயிற்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ள மாணவர்கள், தங்கள் விருப்பத்தை எமிஸ் தளத்தில் ஆசிரியர்கள் வாயிலாக பதிவேற்றம் செய்கின்றனர். அதன்படி, முதற்கட்ட பயிற்சி வகுப்பு, நடந்தது. இதில், சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
ஆனைமலை ஒன்றிய உயர்கல்விக்கான பயிற்சி (பொறுப்பு) தலைமையாசிரியர் சிவப்பிரியா, பயிற்சியை துவக்கி வைத்தார். கருத்தாளர்களான கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவக்குமார், வி.ஆர்.டி., அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர் ஜமீல், பெத்தநாயக்கனுார் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாலமுருகன், தெய்வமணி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். வட்டார வள மேற்பார்வையாளர் ஜெயந்தி, ஆசிரியர் பயிற்றுநர் அன்னலட்சுமி, ஆய்வக உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.