தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு :அகற்ற வேண்டுமென வலியுத்தல்

ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு :அகற்ற வேண்டுமென வலியுத்தல்

ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு :அகற்ற வேண்டுமென வலியுத்தல்


UPDATED : அக் 12, 2026 04:24 PM

ADDED : அக் 12, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 04:24 PM ADDED : அக் 12, 2026 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி செயல்படும் கடைகளை அகற்ற வேண்டும் என, பாரத் சேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பாரத் சேனா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், கோவை மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது:

வால்பாறை நகரில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ளது சிறுகுன்றா கூழாங்கல் ஆறு. இந்தப்பகுதியில் சுற்றுலாபயணியர் குளிக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், அங்கு விதிமுறையை மீறி சாலையோரம் அமைக்கப்பட்ட கடைகளை போலீசார் அகற்றினர்.

இந்நிலையில், கூழாங்கல் செல்லும் ரோட்டில் (நடுமலை எஸ்டேட்டுக்கு செல்லும் ரோடு) அனுமதியின்றி கடைகளை நடத்தி வருகின்றனர். முதலில் தற்காலிக கடைகளாக செயல்பட்டு வந்தன. தற்போது நிரந்தரமாக அதே இடத்தில் கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கடைகளில் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், இந்தப்பகுதியில் உள்ள வனத்திற்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், இந்தப்பகுதியில் சுற்றுலாபயணியர் வீசிச்செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளால், வன விலங்குள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் விதிமுறையை மீறி வைக்கப்பட்டுள்ள கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us