/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமரின் விவசாய நிதி திட்டம் வேளாண் துறை அழைப்பு
/
பிரதமரின் விவசாய நிதி திட்டம் வேளாண் துறை அழைப்பு
ADDED : மே 23, 2025 01:13 AM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பாரத பிரதமரின் விவசாய கவுரவ நிதி திட்டத்தில், விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு, வேளாண் துறை, விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
பாரத பிரதமரின் விவசாய கவுரவ நிதி பி.எம்., கிசான் திட்டத்தில் இதுவரை, 17 தவணைகள் தலா, 2000 வீதம் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு, நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அடுத்த தவணை விரைவில் விடுவிக்கப்பட உள்ள நிலையில், விவசாயிகள் பயனடையும் வகையில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், இது தொடர்பான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
இதில், விவசாய நிலம் சம்பந்தமான பதிவுகள், இ.கே.ஒய்.சி., இணைப்பு, தகுதி சரிபார்ப்பு போன்ற தகவல்கள் வழங்கப்பட உள்ளது. இனிவரும் காலங்களில் தவணைத் தொகை பெற, விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் நில பதிவுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
எனவே, தொடர்புடைய கிராம உதவி வேளாண் அலுவலர்கள் அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை நேரடியாக அணுகி பயன் பெற்றுக் கொள்ளுமாறு வேளாண்துறை, விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.