/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
/
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
ADDED : செப் 30, 2025 10:54 PM
கி ராம, நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம். மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தி, சேவை நிறுவனங்களைத் துவக்கலாம்.
உற்பத்திப் பிரிவினருக்கு திட்ட மதிப்பீடு அதிகபட்சம் ரூ. 50 லட்சம், சேவைப் பிரிவுக்கு ரூ. 20 லட்சம். தொழிற்சாலை கட்டடம், இயந்திரங்கள், நடைமுறை மூலதனம் ஆகியவை இம்மதிப்பீட்டில் அடங்கும்.
நகர்ப்புற பொதுப்பிரிவினருக்கு 15 சதவீதம், சிறப்புப் பிரிவினரான மகளிர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
கிராமப்புறங்களில், பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதமும், சிறப்புப் பிரிவினருக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படும்.
பொதுப்பிரிவினர் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினர் 5 சதவீதமும் சொந்த முதலீடாக செலுத்த வேண்டும்.
உற்பத்திப் பிரிவில் ரூ.10லட்சம், சேவைப் பிரிவில் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக திட்டமதிப்பு இருப்பின் குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.