ADDED : ஜூன் 19, 2026 09:48 PM

அ நிறம் | அளவு
கோவை: இயற்கை உபாதை கழிப்பதாக கூறிவிட்டு தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
பவானிசாகரில் உள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் ராகவன், 26. இவர் மீது வழிப்பறி வழக்குகள் உள்ளன. மங்களூரில் ஒரு வழக்கு தொடர்பாக, கர்நாடக போலீசார் மங்களூரு கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். பிறகு, கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்து வந்தனர்.
மாலை 6:30 மணிக்கு அன்னூருக்கு அருகே உள்ள பச்சா கவுண்டனூரில் இயற்கை உபாதை எனக்கூறி ராகவன் இறங்கி தப்பியோடினார். அவரை தேடும் பணியில் கர்நாடகா, கோவை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
