/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயணிகளை ஏற்றுவதில் பிரச்னை; மோதிக்கொண்ட தனியார் பஸ்கள்
/
பயணிகளை ஏற்றுவதில் பிரச்னை; மோதிக்கொண்ட தனியார் பஸ்கள்
பயணிகளை ஏற்றுவதில் பிரச்னை; மோதிக்கொண்ட தனியார் பஸ்கள்
பயணிகளை ஏற்றுவதில் பிரச்னை; மோதிக்கொண்ட தனியார் பஸ்கள்
ADDED : மே 02, 2025 09:40 PM
கோவை; ஆட்கள் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்னையில், இரு தனியார் பஸ்கள் மோதிக்கொண்டதால், ரயில்நிலையம் அருகில்பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் பயணிகள ஏற்றிச்செல்வதில், தனியார் பஸ் டிரைவர், நடத்துனர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதுவழக்கமாக உள்ளது. இந்நிலையில், நேற்று காலை, உக்கடத்தில் இருந்து ஒரு தனியார் பஸ் காந்திபுரம் நோக்கி புறப்பட்டது. அதே நேரத்தில் மதுக்கரையில் இருந்து, மற்றொரு தனியார் பஸ் காந்திபுரம் நோக்கி சென்றது.
நேரம் மாறி வந்ததாக கூறி, உக்கடத்தில் இருந்து புறப்பட்ட பஸ் டிரைவர், மதுக்கரையில் இருந்து வந்த பஸ் டிரைவரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இரண்டு பஸ் டிரைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு, ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றனர். பஸ்கள் லங்கா கார்னர் ரயில்வே பாலம் அருகில் வந்த போது, முன்னால் சென்ற பஸ் மீது, பின்னால் வந்த மற்றொரு பஸ் மோதியது. இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி நொறுங்கியது. பஸ்களில் பயணித்த நான்கு பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
பஸ் டிரைவர்கள் சாலை நடுவில், பஸ்களை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.