/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகர சாலைகளில் அசுர வேகம் விதிமீறும் தனியார் பஸ்கள்
/
நகர சாலைகளில் அசுர வேகம் விதிமீறும் தனியார் பஸ்கள்
நகர சாலைகளில் அசுர வேகம் விதிமீறும் தனியார் பஸ்கள்
நகர சாலைகளில் அசுர வேகம் விதிமீறும் தனியார் பஸ்கள்
ADDED : செப் 22, 2025 10:39 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், போக்குவரத்து நிறைந்த சாலைகளில், அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பஸ்களை கண்டறிந்து தடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி- - கோவை இடையே இரண்டு நிமிட இடைவெளியில், 35 அரசு பஸ்கள் மற்றும் 16 தனியார் பஸ்கள் என, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த காலத்தில், பொள்ளாச்சி - கோவை இடையே குறுகிய சாலை மட்டுமே இருந்ததால், அரசு பஸ்களை, முந்திக்கொண்டு பயணியரை ஏற்ற வேண்டும் என்பதற்காக போட்டி போட்டு அதிவேகமாக தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
தற்போது, நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு அதிகப்படியானோர் பயணிப்பதால், இடையே உள்ள ஸ்டாப்புகளை, தனியார் பஸ்கள் தவிர்க்கின்றன. வேகக் கட்டுப்பாடு முழுமையாக பின்பற்றப்படுவதில்லை.
விதிமீறும் தனியார் பஸ்களின் இயக்கத்தைக் கண்டறிந்து தடுக்க, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'தனியார் பஸ்களை பொறுத்தமட்டில், காலை மற்றும் மாலை நேரங்களில், பொள்ளாச்சியில் இருந்து புறப்படும்போதே, 'பைபாஸ் கோவை' என்று பயணியரை ஏற்றிச் செல்கின்றனர். இடையே உள்ள ஸ்டாப்புகளை தவிர்த்து, கோவை நோக்கி இயக்கப்படும் தனியார் பஸ்கள், அசுர வேகத்தில் இயக்கப்படுகின்றன,' என்றனர்.