ADDED : ஆக 21, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
சூலுார்: கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி பஸ், நேற்று காலை அரசூர் கல்லாங்காடு பகுதியில் சென்ற போது, பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
நீலம்பூர் போலீசார் மக்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், நேற்று முன்தினம் மாலை கிளீனர், மாணவிகளிடம் அத்துமீறியதாக கூறி, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர். கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார், பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவியரிடம் விசாரித்தனர்.
புகார் உண்மை என தெரியவந்ததால், கிளீனரான சேவியர் இருதயராஜ், 52 என்பவரை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
