/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்; தனியார் பள்ளி மாணவர்கள் புகார்
/
இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்; தனியார் பள்ளி மாணவர்கள் புகார்
இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்; தனியார் பள்ளி மாணவர்கள் புகார்
இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்; தனியார் பள்ளி மாணவர்கள் புகார்
ADDED : மார் 19, 2025 09:25 PM
கோவை; தொட்டிபாளையம் பிரிவு அருகே கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால், படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் உள்ளதாக, மாணவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.
அவிநாசி ரோடு, தொட்டிபாளையம் பிரிவு அருகேயுள்ள கோவை வித்யா மந்திர் பள்ளி மாணவ, மாணவியர், சின்னியம்பாளையம் தபால் நிலையத்தில் இருந்து மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள தபாலில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்கள் பள்ளி அருகே கொட்டப்படும், இறைச்சிக் கழிவுகள் கடும் துர்நாற்றத்துடன், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், வகுப்பறைகளில் பாடத்தை கவனிக்க முடிவதில்லை. இறைச்சிக் கழிவுகளை உண்பதற்கு, தெரு நாய்கள் வருவதால் வளாகத்தில் சுற்றித்திரியும் அவற்றை கடந்து செல்ல எங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயமாக உள்ளது.
எனவே, தாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்து, இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.