ரேஷன் பொருள் வினியோகத்தில் ‘நெட் ஒர்க்’ பிரச்னையால் சிக்கல்
ரேஷன் பொருள் வினியோகத்தில் ‘நெட் ஒர்க்’ பிரச்னையால் சிக்கல்
ADDED : ஆக 28, 2026 04:42 PM
வால்பாறை: பி.ஓ.எஸ்., மிஷின் பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ரேஷன்கடை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வால்பாறை தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., மிஷின் பயன்படுத்தி, கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது, எடையளவு செய்யும் கருவியும், பி.எஸ்.ஓ., மிஷினும், ‘புளூ டூத்’ வாயிலாக இணைத்து, ஒவ்வொரு பொருளும் எடையிட்டு வழங்கப்படுகிறது.
இது நல்ல திட்டமாக இருந்தாலும், வால்பாறை போன்ற மலைப்பகுதியில், ‘நெட் ஒர்க்’ பிரசனை மற்றும் கடும் பனிமூட்டத்தால், எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, வால்பாறை மலைப்பகுதியில் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். யானைகளால் ரேஷன் பொருட்கள் சேதமாவதற்கு உரிய நிவாரணத்தொகையை வனத்துறையினர் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
கூட்டத்தில், மாநில துணை செயலாளர் முருகேசன், சிந்தாமணி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
