/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அன்பு கரங்கள்' திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்?
/
'அன்பு கரங்கள்' திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்?
'அன்பு கரங்கள்' திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்?
'அன்பு கரங்கள்' திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்?
ADDED : பிப் 03, 2026 05:24 AM
கோவை: 'அன்பு கரங்கள்' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை முறையாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆதரவற்ற அல்லது பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வியை தொடர உதவும் வகையில், 'அன்பு கரங்கள்' திட்டத்தின் கீழ் மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் தற்போது 250-க்கும் மேற்பட்ட பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் உள்ளனர்.
இவர்களில், குறிப்பாக பின்தங்கிய கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சரிவர உதவித்தொகை வந்து சேருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது:
அன்பு கரங்கள் திட்ட நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படுகிறது. சில நேரங்களில் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வராததால் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுகிறது. இத்திட்டம் முற்றிலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கானது; ஒற்றைப் பெற்றோரை (தாய் அல்லது தந்தை) இழந்த மாணவர்களுக்கு இதில் இடமில்லை.
தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்கள், மத்திய அரசின் 'மிஷன் வாத்சல்யா' ஸ்பான்சர்ஷிப் திட்டத் தின் கீழ் விண்ணப்பிக்கின்றனர். இத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் அதிகம் வருவதால், தகுதியின் அடிப்படையில் சுமார் 200 பேர் வரை தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதனாலேயே விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. மத்திய அரசிடமிருந்து நிதி விடுவிக்கப்பட்டவுடன், மாணவர்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

