/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிக்னல் இல்லாததால் சின்னியம்பாளையத்தில் சிக்கல்
/
சிக்னல் இல்லாததால் சின்னியம்பாளையத்தில் சிக்கல்
ADDED : ஆக 22, 2025 11:27 PM
சூலுார்: சின்னியம்பாளையத்தில் சிக்னல் இல்லாமல், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அவிநாசி ரோட்டில் உள்ள சின்னியம்பாளையத்தில் அரசு பள்ளி அருகே போலீஸ் செக்போஸ்ட் மற்றும் சிக்னல் உள்ளது. கோவை நகரில் யு டேர்ன் அமைக்கப்பட்டது போல், சின்னியம்பாளையத்திலும் இரு யு டேர்ன்கள் அமைக்கப்பட்டன. அப்போது, சிக்னல் முடக்கப்பட்டது.
நெருக்கடியான இடங்களில் யு டேர்ன் அமைக்கப்பட்டதால், எந்நேரமும் வாகன நெரிசல் ஏற்பட்டது. யு டேர்னை அகற்றி விட்டு, சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரத்தில், ஒரு யு டேர்ன் அகற்றப்பட்டது. ஆனால், சிக்னலை செயல்படுத்தவில்லை.
இதனால், மக்களும், பள்ளி மாணவர்களும் ரோட்டை கடக்க முடியவில்லை. வாகன ஓட்டிகள் ஒரு கி.மீ. துாரம் சென்று திரும்பி வர வேண்டியுள்ளது. அதனால், பள்ளி அருகே உள்ள சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.