/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருப்பூர் வழித்தட பஸ் இயக்கத்தில் சிக்கல்; காலை நேரத்தில் குளறுபடியென புகார்
/
திருப்பூர் வழித்தட பஸ் இயக்கத்தில் சிக்கல்; காலை நேரத்தில் குளறுபடியென புகார்
திருப்பூர் வழித்தட பஸ் இயக்கத்தில் சிக்கல்; காலை நேரத்தில் குளறுபடியென புகார்
திருப்பூர் வழித்தட பஸ் இயக்கத்தில் சிக்கல்; காலை நேரத்தில் குளறுபடியென புகார்
ADDED : மார் 16, 2025 11:57 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து, காலை, 8:00 மணி முதல், 9:00 மணி வரை, திருப்பூருக்குமுறையாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை என,மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருப்பூருக்கு அதிகப்படியான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல்லடத்தை வழித்தடமாக கொண்ட இந்த பஸ்களில், மக்கள் சென்று திரும்புகின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினரும் பயணம் செய்கின்றனர்.
பொள்ளாச்சியில் இருந்து, சேலம், ஈரோடு, அந்தியூர், சத்தி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ்கள், திருப்பூர் மார்க்கமாக செல்கின்றன. தொலைதுார பயணம் என்பதால், இவ்வழித்தடத்தில் மட்டும் புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நெகமம், சுல்தான்பேட்டை, பல்லடம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மட்டும் இந்த பஸ்கள் நின்று செல்லும் என்பதால், பயணியர் இந்த பஸ்களில் பயணிக்கவே முற்படுகின்றனர். அதேநேரம், காலை, 8:00 மணி முதல் 9:00 மணி வரை, பொள்ளாச்சியில் இருந்து, பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
பயணியர் கூறியதாவது: பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பணி மார்க்கமாக பலரும் சென்று திரும்புகின்றனர். அதன்படி, காலை, 7:30 முதல் 8:30 மணிக்குள், பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் பஸ்சில் பயணித்தால் மட்டுமே, உரிய நேரத்திற்குள் அங்கு செல்ல முடியும்.
அவ்வகையில், காலை, 8:00 முதல் 9:00 மணிக்குள், பல்லடம் கிளை பஸ்களே, பொள்ளாச்சி வந்து திரும்புகின்றன. குறிப்பாக, மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி, திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் மார்க்கமாக திருச்சி செல்லும் பஸ், பண்ணாரி செல்லும் பஸ் முறையாக இயக்கப்படுவதில்லை.
இது குறித்து, பல்லடம் கிளை மேலாளரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. அவ்வப்போது, மாற்று பஸ் என்ற பெயரில் பழைய பஸ் இயக்கப்படுவதால், ரேடியேட்டர், இன்ஜின் பழுது என, நடுவழியில் நின்று விடுகிறது. பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
எனவே, இவ்வழித்தடத்தில், காலை 8:00 மணிக்கு மேல் இயக்கப்படும் பழைய பஸ்களை மாற்றி, உரிய நேரத்திற்கு புதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.