தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/‘பேராசிரியர்களும், விஞ்ஞானிகளும் அறிவை அப்டேட் செய்வது அவசியம்’

‘பேராசிரியர்களும், விஞ்ஞானிகளும் அறிவை அப்டேட் செய்வது அவசியம்’

‘பேராசிரியர்களும், விஞ்ஞானிகளும் அறிவை அப்டேட் செய்வது அவசியம்’


UPDATED : நவ 19, 2026 03:40 PM

ADDED : நவ 19, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 03:40 PM ADDED : நவ 19, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககம் சார்பில், வேளாண் பேராசிரியர்களின் அறிவு, திறன் மற்றும் கற்பித்தல் ஆற்றலை மேம்படுத்தும் வகையில், 'கற்று செயலாற்று' என்ற மூன்று நாள் பயிற்சி முகாம் பல்கலை வளாகத்தில் துவங்கியது.

துவக்க விழாவில் பயிர் மேலாண்மை இயக்குநர் பழனிவேலன் பேசுகையில், ''பேராசிரியர்கள் தங்களது அறிவியல் அறிவையும் திறன்களையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய டீன் பாலசுப்பிரமணியன் பேசுகையில், ‘‘காலநிலை மாற்றம், எல் நினோ உள்ளிட்ட இயற்கைச் சவால்களை எதிர்கொள்ள, விஞ்ஞானிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்,’’ என வலியுறுத்தினார்.

திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்குநர் ஜெயகுமார், தோட்டக்கலை இணைப் பேராசிரியர் கவிதா, வனவியல் பேராசிரியர் உமேஷ் கன்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us