/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனத்தில் விறகு தேட தடை; வனத்துறை அறிவுறுத்தல்
/
வனத்தில் விறகு தேட தடை; வனத்துறை அறிவுறுத்தல்
ADDED : அக் 23, 2024 12:08 AM
வால்பாறை : வனப்பகுதியில் தொழிலாளர்கள் விறகு தேடி செல்வதை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வால்பாறையில், யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் அதிகமாக நடமாடுகின்றன. இந்நிலையில், எஸ்டேட் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தொழிலாளர்கள், விறகு தேடி செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர். சில நேரங்களில் வன விலங்குகளின் பிடியில் சிக்கி, மனிதர்கள் உயிர்பலியாவதும் வாடிக்கையாகி விட்டது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் வெளியில் வரத்துவங்கியுள்ளன. வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதியில், வனவிலங்கு -- மனித மோதலை தவிர்க்க தொழிலாளர்கள் வனப்பகுதிக்குள் விறகு தேடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்,' என்றனர்.