/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பன்முக திறன் ஊக்குவித்தல்; கோவையில் 2 பள்ளிகள் தேர்வு
/
பன்முக திறன் ஊக்குவித்தல்; கோவையில் 2 பள்ளிகள் தேர்வு
பன்முக திறன் ஊக்குவித்தல்; கோவையில் 2 பள்ளிகள் தேர்வு
பன்முக திறன் ஊக்குவித்தல்; கோவையில் 2 பள்ளிகள் தேர்வு
ADDED : ஜூலை 03, 2025 08:54 PM
கோவை; கோவை மாவட்டத்தில் இருந்து இரண்டு பள்ளிகள், பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தேர்வாகியுள்ளன.
ஆசிரியர் திறன், தலைமைத்துவம், கற்றல், கற்பித்தல் மற்றும் மாணவர்களின் பன்முக திறன்களை ஊக்குவிக்கும் சிறந்த செயல்பாட்டுக் கொண்ட பள்ளிகளை ஊக்குவிக்கும் நோக்கில், 'பேராசிரியர் அன்பழகன் விருது', பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2024-25 கல்வியாண்டிற்கான விருதுக்கு, மாவட்டத்துக்கு தகுதியான நான்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அதிலிருந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 76 சிறந்த பள்ளிகள் 'பேராசிரியர் அன்பழகன் விருது' பெற உள்ளன.
அந்த வகையில், கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் காந்திமாநகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் விருதுக்கு தேர்வாகியுள்ளன.
இப்பள்ளிகளுக்கு, பராமரிப்பிற்காக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படவுள்ளனது. விருது வழங்கும் விழா, ஜூலை 6ல் திருச்சி தேசிய கல்லுாரி வளாகத்தில் நடக்க உள்ளது.