/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புரோட்டா குருமா கெட்டுப்போச்சு; ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து

ADDED : அக் 10, 2024 05:41 AM

கோவை : புரோட்டா குருமா சுவையாக இல்லை என, ஓட்டல் உரிமையாளரை தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் ஆபிதா பிரியாணி ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று முன்தினம் கரீம், 32 மற்றும் சமீர், 40 ஆகிய இருவர், புரோட்டா பார்சல் வாங்கி சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் திரும்பி வந்தனர். ஓட்டல் உரிமையாளர் அமானுல்லா, 54 ஓட்டலில் இருந்தார். அப்போது அவர்கள், புரோட்டாவுக்கு கொடுத்த குருமா கெட்டுப்போயுள்ளதாக கூறி, உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்தவர்கள் உரிமையாளரை கத்தியால் தாக்கினர். இதில், அமானுல்லாவுக்கு கண், காது, மற்றும் இடுப்பு பகுதியில், காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்ற அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புகாரின் பேரில், உக்கடம் போலீசார் தனிப்படை அமைத்து, தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.