தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/‘குப்பை வாகனங்களை காக்க வைக்கின்றனர்’

‘குப்பை வாகனங்களை காக்க வைக்கின்றனர்’

‘குப்பை வாகனங்களை காக்க வைக்கின்றனர்’


UPDATED : நவ 17, 2026 03:00 PM

ADDED : நவ 17, 2026 03:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 03:00 PM ADDED : நவ 17, 2026 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநகரில் தினமும் 1,000 டன் குப்பை சேகரிக்க 500க்கு மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குப்பை பெறும் நடைமுறையில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஏ.ஐ.டி.யூ.சி., கோவை செயலர் செல்வராஜ் கூறுகையில், குப்பையை நேரடியாக வெள்ளலூர் கொண்டு செல்வதில்லை. பீளமேடு மற்றும் உக்கடம் குப்பை தரம் பிரிப்பு மையங்களுக்கு சென்று, அங்கிருந்து வெள்ளலூர் செல்லும். அந்த மையங்களில் உடனடியாக குப்பை பெறுவதில்லை.

டிரைவர்களை மணிக்கணக்கில் காக்க வைக்கிறார்கள். 10 மணி நேரத்துக்கு மேலாக வேலை செய்ய நிர்பந்தமாகிறது. ஓவர்டைம் சம்பளம் வழங்குவதில்லை. பணியாளர்கள் வேதனையடைகிறார்கள். குப்பையை நேரடியாக வெள்ளலூருக்கு செல்ல அனுமதித்தால் பணிச்சுமை குறையும். இல்லையென்றால் மையங்களில் குப்பை தொட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us