/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தை திருமணங்களை தடுக்க பாதுகாப்பு குழுக்கள் ஊராட்சிகளில் புதுப்பிக்க எதிர்பார்ப்பு
/
குழந்தை திருமணங்களை தடுக்க பாதுகாப்பு குழுக்கள் ஊராட்சிகளில் புதுப்பிக்க எதிர்பார்ப்பு
குழந்தை திருமணங்களை தடுக்க பாதுகாப்பு குழுக்கள் ஊராட்சிகளில் புதுப்பிக்க எதிர்பார்ப்பு
குழந்தை திருமணங்களை தடுக்க பாதுகாப்பு குழுக்கள் ஊராட்சிகளில் புதுப்பிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 24, 2024 09:16 PM
உடுமலை -ஊராட்சிகளில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை மீண்டும் புதுப்பிக்க, உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிராக குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை என, பல்வேறு சூழ்நிலைகளில் பிரச்னைகள் ஏற்படுகிறது.
இந்த பிரச்னைகளிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்கும், சிக்கலில் இருக்கும் குழந்தைகளை மீட்பதற்கும் என,பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள், ஒவ்வொரு ஊராட்சியிலும் துவக்கப்படுகிறது.
சமூக நலத்துறையின் சார்பில் இக்குழுக்கள் துவக்கப்பட்டாலும், அனைத்துத்துறைகளின் பங்களிப்பும் இந்த குழுவில் இருக்க வேண்டும்.
பாதுகாப்பு குழுவில், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி தலைமையாசிரியர், சமூக நலத்துறையினர், மகளிர் திட்டத்தினர், வருவாய்த்துறை அலுவலர், அந்த ஊராட்சியிலுள்ள தன்னார்வலர் ஒருவர் என உறுப்பினர்களைக்கொண்டு குழு அமைக்கப்படுகிறது.
கிராமங்களில் உள்ள வளர் இளம் பெண்கள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற சூழலை உறுதிப்படுத்துவதும், இந்த குழுவின் செயல்பாடாகும்.
குழந்தை திருமணங்களை தடுப்பதற்கும், பாலியல் துன்புறுத்தலில் இருந்து விடுபடுவதற்கும், இந்த குழுவினரை கிராமங்களில் அணுகலாம். ஆனால், இப்போது இவ்வாறு குழுக்கள் என எதுவும் இல்லை.
அந்தந்த ஊராட்சிகளில், இத்தகைய கண்காணிப்பு குழுக்கள் இல்லாததால், உடுமலை, மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில், குழந்தை திருமணங்கள் அதிகரிக்கின்றன. மொபைல் எண்களில், புகார்களை பதிவு செய்வதற்கு குழந்தைகள் அச்சப்படும் நிலை, இன்னும் சில கிராமங்களில் உள்ளது. இதனால் பாதுகாப்பு குழுவினரை, ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பிரபலப்படுத்த வேண்டும்.
குழுக்களின் செயல்பாட்டையும் புதுப்பிக்க வேண்டும். இதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் முயற்சி எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது: உதவி எண் வாயிலாக, புகார்கள் வருவதைக்கொண்டு அலுவலர்கள் தலையிட்டு திருமணங்களை தடுத்து நிறுத்துகிறோம். ஆனாலும், மீண்டும் நடக்கிறது.
மேலும், சில பகுதிகளில் குழந்தைகளுக்கு தகவல் தொடர்பு கொள்வதற்கு வசதியில்லாமல் போகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு குழுவினர், தொடர்ந்து கண்காணிப்பதால் இத்தகைய பிரச்னைகளை முன்பாகவே தடுக்கலாம்.
இவ்வாறு, கூறினர்.