/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எட்டாவது சம்பள கமிஷன் பணிகளை விரைவுபடுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
/
எட்டாவது சம்பள கமிஷன் பணிகளை விரைவுபடுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
எட்டாவது சம்பள கமிஷன் பணிகளை விரைவுபடுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
எட்டாவது சம்பள கமிஷன் பணிகளை விரைவுபடுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 03, 2026 05:20 AM

கோவை: எஸ்.ஆர்.எம்.யூ., மற்றும் ஏ.ஐ.ஆர்.எப்., சேலம் கோட்டம் கோவை தலைமை கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில்வே பணிமனையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை தலைமை கிளைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். கிளைத்தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.
சேலம் கோட்ட துணைச் செயலாளர் ஜோன் பேசுகையில், ''ரயில்வே பணியாளர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. எட்டாவது சம்பள கமிஷன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சம்பள கமிஷன் பரிந்துரைகள் வெளியிடும் வரை, ஜன.,முதல் இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும்.
அனைத்து பிரிவுகளிலும் உள்ள, 2.5 லட்சம் காலி இடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்குறைப்பு, அவுட் சோர்சிங், தனியார்மய முயற்சிகள் கூடாது. ஆட்குறைப்பு செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.