ADDED : ஆக 11, 2026 08:05 PM

அ நிறம் | அளவு
கோவை: கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு(பெரா) சார்பில், காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நில அளவை பணியில் ஈடுபட்டிருந்த சர்வேயரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாக்குதலுக்கு உள்ளான சர்வேயர் மீதே போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
