/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காயமடைந்தவருக்கு நிவாரணம் வழங்கல்
/
காயமடைந்தவருக்கு நிவாரணம் வழங்கல்
ADDED : அக் 24, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள காடம்பாறை செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி,37. இவர், நேற்று முன்தினம் மாலை வெள்ளிமுடி செட்டில்மென்ட் பகுதியிலிருந்து, காடம்பாறை செட்டில்மென்ட் பகுதிக்கு நடந்து சென்றார்.
அப்போது, கேஸ்மட்டம் என்ற இடத்தில் குட்டியுடன் நின்ற யானை நடந்து சென்ற மூர்த்தியை தாக்கியது. படுகாயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா தலைமையிலான வனத்துறையினர், மூர்த்தியின் குடும்பத்தாரிடம், 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கினர்.

