ADDED : டிச 27, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி,; ஆனைமலை ஒன்றியம், ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு, 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை சார்பில், ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வால்பாறை நகராட்சி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் அனீஸ் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகி சம்பத்குமார், ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை வழங்கினார்.
கர்ப்பிணிகள் ஊட்டச்சத்தான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். காய்கறி வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதே போன்று, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டது.