பி.எஸ்.ஜி., ஐடெக் பெற்றது சிறந்த கட்டமைப்பு விருது
பி.எஸ்.ஜி., ஐடெக் பெற்றது சிறந்த கட்டமைப்பு விருது
UPDATED : அக் 14, 2026 07:26 PM
ADDED : அக் 14, 2026 07:24 PM

கோவை: நீலாம்பூரில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், தனது ரோபோட்டிக்ஸ் மற்றும் கணக்கீட்டு அறிவியல் கட்டடத் தொகுதியான இ8 பிளாக் கட்டமைப்பிற்காக, இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட், அல்ட்ராடெக் சிறந்த கான்கிரீட் கட்டமைப்பு விருது 2026 பெற்றது.
விருது வழங்கும் விழா, இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட், கோவை மையம், அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் இணைந்து நடத்திய ஐ.சி.ஐ., அல்ட்ராடெக் அவார்ட்ஸ் 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்தது.
இக்கட்டமைப்புத் திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றுவதில் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் முக்கியப் பங்களிப்பு வழங்கியுள்ளனர். பி.எஸ்.ஜி. நிறுவனங்களைச் சேர்ந்த ரவிச்சந்திரன் திட்டப் பொறியாளராகவும், மித்ரன் ஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயகோபால் கட்டமைப்பு ஆலோசகராகவும், ஸ்ரீனிவாசன் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன் ஒப்பந்ததாரராகவும் செயல்பட்டுள்ளனர்.
விருது பெற்ற இ8 கட்டடத் தொகுதி, தரமான கட்டுமானம், பொறியியல் சிறப்புத்தன்மை, நவீன கல்வி உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் பி.எஸ்.ஜி. ஐடெக் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பறைசாற்றுகிறது.
