/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடைப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி. அணி முதலிடம்
/
கூடைப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி. அணி முதலிடம்
ADDED : செப் 03, 2025 11:14 PM
கோவை; மாவட்ட அளவில் கல்லுாரி மாணவியருக்கான 'முதல்வர் கோப்பை' கூடைப்பந்து போட்டி, கோவை நேரு ஸ்டேடியம் எதிரே கூடைப்பந்து மைதானத்தில் கடந்த மூன்று நாட்கள் நடந்தது. பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி.ஆர். மகளிர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி அணியும், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி-ஏ அணியும் மோதின.
பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி அணி, 73-50 என்ற புள்ளிக்கணக்கில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி அணியை வென்று, முதலிடம் பிடித்தது.
மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லுாரி அணியும், கே.பி.ஆர். இன்ஜி., கல்லுாரி அணியும் மோதின. இதில், கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லுாரி அணி, 22-19 என்ற புள்ளிகளில் கே.பி.ஆர். இன்ஜி., கல்லுாரி அணியை வென்று, மூன்றாமிடம் பிடித்தது.