/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் தடகள போட்டியில் சாம்பியன்
/
பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் தடகள போட்டியில் சாம்பியன்
பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் தடகள போட்டியில் சாம்பியன்
பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் தடகள போட்டியில் சாம்பியன்
ADDED : டிச 24, 2024 07:17 AM
கோவை; பாரதியார் பல்கலை, 42வது தடகள போட்டி பெண்கள் பிரிவில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி அணி, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, 42வது தடகள போட்டி, நேரு ஸ்டேடியத்தில் மூன்று நாட்கள் நடந்தது.
இதில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோட்டை சேர்ந்த, 61க்கும் அதிகமான கல்லுாரிகளை சேர்ந்த, 320 மாணவர்கள், 270 மாணவியர் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டி நிறைவில், பெண்கள் பிரிவில், 143 புள்ளிகளுடன் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி முதலிடத்தையும், 101 புள்ளிகளுடன் நிர்மலா பெண்கள் கல்லுாரி இரண்டாம் இடத்தையும், 37 புள்ளிகளுடன் உடுமலை ஜி.வி.ஜி., பெண்கள் கல்லுாரி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
ஆண்கள் பிரிவில், 123 புள்ளிகளுடன் டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி, 67 புள்ளிகளுடன் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, 42 புள்ளிகளுடன் வி.எல்.பி., கலை அறிவியல் கல்லுாரி ஆகியன முதல் மூன்றாம் இடங்களை பிடித்தன.
சிறந்த தடகள வீரராக, கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியை சேர்ந்த சாம் வசந்த், சிறந்த தடகள வீராங்கனையாக ஜி.வி.ஜி., கல்லுாரியை சேர்ந்த, ஏஞ்சல் சில்வியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு, கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டுகள் தெரிவித்தனர்.