/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடிக்கையாளர் மனதில் என்றென்றும் பி.எஸ்.ஆர்.,
/
வாடிக்கையாளர் மனதில் என்றென்றும் பி.எஸ்.ஆர்.,
ADDED : அக் 10, 2025 12:29 AM

துணி ரகங்களை பொறுத்தவரை, நேற்றும், இன்றும், நாளையும் என்றென்றும் தன்னிகரற்ற பெயரோடு விளங்குகிறது பி.எஸ்.ஆர்., சில்க்ஸ். 100 அடி ரோடு மற்றும் கிராஸ்கட்டில், வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி விட்டது இந்நிறுவனம்.
வாடிக்கையாளர்களின் எண்ணங்களை, வண்ணங்களாக மாற்றக் கூடிய வகையில், புதுவிதமாக கிச்சா காட்டன், கோரா, ஹார்ட் டசார் வேவ் சாரீஸ், ஜெய்ப்பூர் சாப்ட் காட்டன், முல்சந்தேரி என, ஹார்ட் கோட்டா பிரின்ட் வரை, அடுக்கிக் கொண்டே போகிறார்கள். 300ல் இருந்து, 1,500 ரூபாய் வரை கிடைப்பது, பல புடவைகளை எடுக்கத் துாண்டுகிறது.
முதல் தளத்தில், சற்று உயர்தரமான சப்பா சாரீஸ், பனாரஸ் டசார் கட் ஒர்க், செமி டசார் பிரின்ட், லினைன், பசவாடா டிஜிட்டல் பிரின்ட், காஞ்சி காட்டன், காஞ்சி கத்வால், கோவை காட்டன், மங்களகிரி. சக்கத் காட்டன் என, ரகங்களை கேட்டுக் கொண்டிருந்தாலே நேரம் பிடிக்கிறது. அந்தளவுக்கு டிசைன்கள் உள்ளன. திருமணத்துக்கு என்றே தயாரான காஞ்சிபுரம் ஜகார்டு புடவைகள், 25 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரையிலான விலையில், அழகுக்கே அழகு சேர்க்கும்.
இரண்டாவது தளத்தில், பனாரஸ், சாப்ட் சில்க் டிஷ்யு, காஞ்சிபுரம் டிஜிட்டல் ப்ளோரல் டிசைன், கோரா சில்க், பனாரஸ் டிஷ்யு சில்க் ரகங்கள், எதை தேர்வு செய்வது என்று போட்டியே நிலவுகிறது. ஒவ்வொரு ரகமும் மகளிரின் மனதை கொள்ளையடிக்கின்றன. பட்டு ரகங்களை வைத்திருக்கும் தளத்தில், அதன் உள் அலங்காரமும், மங்கள உணர்வை ஏற்படுத்துகிறது.
மூன்றாவது தளத்தில், சல்வார் மெட்டீரியல், சல்வார் குர்த்தி, சல்வார் ரெடிமேடு, ரெடிமேடு பிளவுசஸ், பிளவுஸ் மெட்டீரியல், லெகின், ஜெக்கின், ரெடிமேடு ஷாட் குர்த்தி... அப்பப்பா... ஒன்று எடுக்க வந்தால், டஜன் கணக்கில் எடுக்க வேண்டும் போலிருக்கிறதே என்று சொல்லும் அளவுக்கு பளபளக்கும் கலெக்சன்கள். ஆண்களுக்கு வெண்மை சட்டை மற்றும் வேட்டிகள் தான் பிரதானம்.
இளையராஜா பாடல் வரும் போதே அதன் முன்னிசை, நம்மை அந்த உணர்வுக்கு அழைத்துச் செல்வது போல், பி.எஸ்.ஆர்.,க்குள் நுழைந்ததும், ஆடை உலகத்துக்குள் லயித்து, வெளிவரும் போது, அப்படியொரு மகிழ்ச்சியை இவர்கள் தருகிறார்கள் என்பது நிஜம்.