தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம் உடனடியாக பணியேற்க உத்தரவு

 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம் உடனடியாக பணியேற்க உத்தரவு

 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம் உடனடியாக பணியேற்க உத்தரவு


ADDED : மார் 02, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: கோவை மாவட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பி.டி.ஓ..) பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அன்னுார் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கரி, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) மாற்றப்பட்டுள்ளார்.

சூலுாரில் பணிபுரிந்த முத்துராஜ், அன்னுாருக்கு மாற்றப்பட்டுள்ளார். அன்னுாரில் பணிபுரிந்து வந்த மகேஸ்வரி, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்து வந்த ஜென்கின்ஸ் அன்னுாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சிவகாமி, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணிபுரிந்த சுபா, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கு பணிபுரிந்த ரவீந்திரன், தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) நியமிக்கப்பட்டுள்ளார். பதிலி நபரை எதிர்பார்க்காமல், மாறுதல் வழங்கப்பட்ட இடத்தில் உடனே பணியேற்க வேண்டும் என, கலெக்டர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us