/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்துமீறும் லாரிகளால் பொதுமக்கள் பாதிப்பு
/
அத்துமீறும் லாரிகளால் பொதுமக்கள் பாதிப்பு
ADDED : செப் 04, 2025 11:06 PM
போத்தனுார்; கோவை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 8 முதல் 11 மற்றும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை லாரிகள் இயக்க அனுமதி கிடையாது. இதில், சமையல் காஸ் போன்ற அத்தியாவசிய லாரிகளுக்கு மட்டும் விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.
இச்சூழலில், குனியமுத்துார் சுற்றுப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட நேரங்களிலும் லாரிகள் இயக்கப்படுகின்றன. மண், கல், செங்கல்லுடன் டிப்பர் லாரிகள் அதிகளவு அதிவேகத்தில் வந்து, செல்கின்றன. போக்குவரத்து நெரிசலுடன் விபத்துக்கான வாய்ப்பும் அதிகளவு நிலவுகிறது. போக்குவரத்து போலீசார் இவ்வாகனங்களை கண்டுகொள்வதில்லை.
பெரிய அளவிலான விபத்து ஏற்படும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.