UPDATED : நவ 13, 2026 07:39 PM
ADDED : நவ 13, 2026 07:36 PM

அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டோரம் ஆக்கிரமிப்பில் உள்ள, நடைபாதையை மீட்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டோரம், ஏராளமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. மக்கள் எளிதாக வந்து செல்ல நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரோட்டோரம் கடை வைத்திருக்கும் சிலர் நடைபாதையை ஆக்கிரமித்து குப்பை கொட்டுவது, கடை பெயர் பலகை வைப்பது மற்றும் இதர பொருட்களை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சர்வீஸ் ரோட்டில் நடந்து செல்கின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் ரோட்டோர ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
