/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'போதை பொருட்களை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை'
/
'போதை பொருட்களை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை'
'போதை பொருட்களை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை'
'போதை பொருட்களை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை'
ADDED : அக் 07, 2024 12:45 AM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் போலீசார் சார்பில் குற்ற தடுப்பு குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் குற்ற தடுப்பு குறித்து, பொது மக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசார் பொது மக்களை நேரில் சந்தித்து, எவ்வாறு குற்றங்கள் ஏற்படுகிறது, அதனை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் அறிவுறுத்தலின் படி, , மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் , எஸ்.ஐ.,கள் குரு சந்திர வடிவேல், ஆனந்தகுமார் உள்ளிட்டோர், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பொது மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.
இக்கூட்டத்தில் டி.எஸ்.பி., பாலாஜி தலைமை வகித்து பேசுகையில், ''குற்ற சம்பவங்கள் நிகழ, இளம் தலைமுறையினரிடம் அதிகரித்து வரும் போதை பழக்கமே முக்கிய காரணம். போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தாலும் இதை ஒழிக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம். பெற்றோர்கள், இளைஞர்களிடம் போதை பழக்கத்தின் தீமை பற்றி அறிவுறுத்துவதோடு கண்காணிக்கவும் வேண்டும். திருட்டு சம்பவங்களை தடுக்கவும், திருடர்களை அடையாளம் கண்டு உடனடியாக அவர்களை பிடிக்கவும் சி.சி.டி.வி., கேமரா பதிவுகள் போலீசாருக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. எனவே முடிந்தவரை அனைவரும் தங்கள் இல்லங்கள் மற்றும் கடைகளில் மட்டுமின்றி, குடியிருப்புகள் அதிகமுள்ள வீதிகளில் சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்த வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற இயலாத சிறுவர்களிடம் இரு சக்கர வாகனங்களை கொடுக்கும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.