/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழிந்து செல்லும் சாக்கடையால் இடையூறு; சுத்தம் செய்ய பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
வழிந்து செல்லும் சாக்கடையால் இடையூறு; சுத்தம் செய்ய பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வழிந்து செல்லும் சாக்கடையால் இடையூறு; சுத்தம் செய்ய பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வழிந்து செல்லும் சாக்கடையால் இடையூறு; சுத்தம் செய்ய பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 20, 2025 06:47 AM

மக்களுக்கு சிரமம்
கோவை வார்டு எண் 69, அழகேசன் சாலை 2 மற்றும் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பில், சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -
-- பிரசாத், கோவை.
சாலையின் அவலம்
கோவை (வடக்கு வட்டம்) பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் கிராமம், குப்பநாயக்கன்பாளையம் குக்கிராமத்தில், சத்ய காளி அம்மன் கோவில் அருகில் உள்ள நீர் தேக்க தொட்டி முதல், 200 அடி நீளம் மட்டும் தெரு நீண்டகாலமாக செப்பனிடப்படவில்லை. அடிக்கடி தோண்டப்பட்ட குழிகள் காரணமாக, பலர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். பெரியவர்கள், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு, சிரமம் ஏற்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- தர்ஷன், குப்பநாயக்கன்பாளையம்.
வழிந்தோடும்சாக்கடை நீர்
கணபதி, கட்டபொம்மன் வீதி எக்ஸ்டென்ஷன், வேலன் நகரில், சாக்கடை முழுவதுமாக அடைத்துக் கொண்டுள்ளது. ரோட்டில் வழிந்து செல்வதால், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சாக்கடை அடைப்பை சீரமைக்க வேண்டும்.
--- துரை, வேலன் நகர்.
எரியாத விளக்கு
ராமநாதபுரம், கணேசபுரம், சுப்பையன் வீதியில் (64வது வார்டு) CZ- W-64 -SB-12-P-19 குறியீடுள்ள தெருவிளக்கு, பல மாதங்களாக எரிவதில்லை. இரவில் இப்பகுதியை கடப்பதற்கே அச்சமாக உள்ளது. தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தில், நேரடியாக புகார் சொல்லியும் சரி செய்யவில்லை.
- -ராஜூ, ராமநாதபுரம்.
கிடப்பில் உள்ளது
சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, கஸ்துாரிநாயக்கன்பாளையம் பகுதியில், கடந்த 50 நாட்களுக்கு முன், சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட இணைப்பு சாலை, இன்னும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
-- உமானந்தன், சோமையம்பாளையம்.