/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்கேயம்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம்
/
காங்கேயம்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம்
ADDED : டிச 04, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சூலுார் தாலுகாவுக்குட்பட்ட காங்கேயம்பாளையம் கிராமம் அஸ்வினி மஹால் திருமணமண்டபத்தில், வரும் 11 அன்று, மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
காலை 10:30 மணிக்கு நடக்கும் முகாமுக்கு, கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகிக்கிறார்.
சூலுார் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசுப்பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
சூலுார் தாலுகாவில் வசிக்கும் மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பிக்கலாம். இதில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.