/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போஸ்டர்கள் அகற்றம் பொதுமக்கள் நிம்மதி 'தினமலர்' செய்தி எதிரொலி
/
போஸ்டர்கள் அகற்றம் பொதுமக்கள் நிம்மதி 'தினமலர்' செய்தி எதிரொலி
போஸ்டர்கள் அகற்றம் பொதுமக்கள் நிம்மதி 'தினமலர்' செய்தி எதிரொலி
போஸ்டர்கள் அகற்றம் பொதுமக்கள் நிம்மதி 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : மார் 20, 2025 11:15 PM

வால்பாறை: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் நிழற்கூரையில், விதிமுறையை மீறி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை, நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
வால்பாறை நகரில் காந்திசிலை பஸ் ஸ்டாண்ட், தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. இங்கிருந்து தான் அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும், பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பயணியர் நிழற்கூரையை சுற்றிலும் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு விளம்பர போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.
இது குறித்து, கடந்த வாரம் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து நகராட்சி கமிஷனர் ரகுராமன் உத்தரவின் பேரில், பயணியர் நிழற்கூரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை, நகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றினர். நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையால் மக்கள் நிம்மதியடைந்தனர்.