/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிக்க குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி
/
குடிக்க குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி
குடிக்க குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி
குடிக்க குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி
ADDED : ஆக 29, 2025 10:21 PM

மேட்டுப்பாளையம்; சின்னக்கள்ளிப்பட்டி ஊராட்சியில் குடிநீர் இல்லாமல் பொது மக்கள் தவிக்கின்றனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னக்கள்ளிப்பட்டி ஊராட்சி, கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மணி நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில், 2008ம் ஆண்டு கட்டிய, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இதிலிருந்து வாரத்திற்கு ஒருமுறை, தற்போது குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது என, பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மணிநகரில் குடியிருக்கும் பொதுமக்கள் கூறியதாவது: இப்பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பு வரை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வந்தது. தற்போது ஐந்திலிருந்து ஏழு நாட்களுக்கு ஒரு முறை, ஒரு மணி நேரம் மட்டுமே வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் பணம் கொடுத்து வாங்க வேண்டியது உள்ளது. போர்வெல் இருந்தும் சரியாக உப்பு தண்ணீர் விநியோகம் செய்வதில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், தீர்வு கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு பொது மக்கள் கூறினர்.