/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரிகளில் 'அட்மிஷன்' தரவரிசைப்பட்டியல் வெளியீடு
/
அரசு கல்லுாரிகளில் 'அட்மிஷன்' தரவரிசைப்பட்டியல் வெளியீடு
அரசு கல்லுாரிகளில் 'அட்மிஷன்' தரவரிசைப்பட்டியல் வெளியீடு
அரசு கல்லுாரிகளில் 'அட்மிஷன்' தரவரிசைப்பட்டியல் வெளியீடு
ADDED : மே 31, 2025 04:30 AM
கோவை; தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் துவங்கியுள்ளன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, கடந்த 7ம் தேதி முதல் 29ம் தேதி வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2.25 லட்சம் பேர் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தனர்.
அவர்களில், 1.08 லட்சம் மாணவியர், 76 ஆயிரம் மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர், 78 பேர் என, 1.84 லட்சம் பேர்.
சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல், நேற்று முன்தினமும், பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப்பட்டியல், நேற்றும் வெளியிடப்பட்டன.
இதில், கோவை அரசு கலை கல்லுாரியில் உள்ள 1727 இடங்களுக்கு, 32 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மற்றும் பொது கலந்தாய்வுக்கான தகவல், எஸ்.எம்.எஸ்., மற்றும் மின்னஞ்சல், அந்தந்த கல்லுாரிகள் வாயிலாக, மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதன் வாயிலாக, மாணவர் சேர்க்கை நடைமுறைகள் துவங்கியுள்ளன. அதன்படி, சிறப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வு, ஜூன் 2ம் தேதியும், பொதுக் கலந்தாய்வு ஜூன் 4ம் தேதியும் துவங்க உள்ளன.
தொடர் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை, ஜூன் 14ம் தேதியும் நடத்தப்படும்.
மாணவர் சேர்க்கை முடிந்த பின், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 30ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.