/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானியத்தில் பயறு நுண்ணுாட்டங்கள்
/
மானியத்தில் பயறு நுண்ணுாட்டங்கள்
ADDED : செப் 27, 2025 12:51 AM
கோவை; வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி அறிக்கை:
கோவை மாவட்டத்தில், 6,483 ஹெக்டரில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், 1053 ஹெக் டர் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. கொண்டைக்கடலை விதைப்புக்கு மட்டுமே மழை தேவை. பயறு வகைகளுக்கு 350 மி.மீ., மழையே போதுமானது. அதிக பனிப்பொழிவு தேவை.
கோவையில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் பயறு வகை திட்டத்தில், நுண்ணுாட்டங்கள் மற்றும் செயல்விளக்கத் திடல்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
கிணத்துக்கடவு, பெ.நா.பாளையம், பொள்ளாச்சி, சர்க்கார் சாமக்குளம் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களையோ, தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்ட ஆலோசகரையோ தொடர்பு கொள்ளலாம்.