/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொண்டிபாளையம் கோவிலில் புரட்டாசி திருவிழா
/
மொண்டிபாளையம் கோவிலில் புரட்டாசி திருவிழா
ADDED : செப் 18, 2024 08:58 PM
அன்னுார் : மொண்டிபாளையம், பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழா வரும் 21ம் தேதி நடக்கிறது.
அன்னுார் அருகே உள்ள மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. மேலைத் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் ஆறு சனிக்கிழமைகளில், திருவிழா நடக்கிறது.
வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து பல ஆயிரம் பக்தர்கள் வந்து புரட்டாசி சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். வருகிற (21ம் தேதி) சனிக்கிழமை அதிகாலை 4:00 மணிக்கு மகாபிஷேகம், திருமஞ்சனம் நடக்கிறது.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, பசூர் மற்றும் பகத்தூர் பஜனை குழுவின், நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு கருட வாகனத்தில், பெருமாள் திருவீதி உலா நடைபெறுகிறது.
மூன்றாவது சனிக்கிழமை விழா வருகிற 28ம் தேதி நடக்கிறது. காலை 4:00 மணிக்கு மகா அபிஷேகம், திருமஞ்சனம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, அச்சம்பாளையம், செல்வ விநாயகர் குழுவின் பஜனை நடக்கிறது. இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை, அவிநாசி, அபிநயம் பரதநாட்டிய பள்ளியின் பரதநாட்டியம் நடக்கிறது.
மேட்டுப்பாளையம், அன்னுார், அவிநாசி மற்றும் புளியம்பட்டியில் இருந்து மொண்டிபாளையம் கோவிலுக்கு, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பு பேருந்துகள் சனியன்று இயக்கப்படுகின்றன.