வட்டார விரிவாக்க மையங்களில் மானிய விலையில் தரமான விதை
வட்டார விரிவாக்க மையங்களில் மானிய விலையில் தரமான விதை
ADDED : ஜூலை 08, 2026 07:28 AM

கோவை: மானிய விலையில் தரமான விதைகள் விநியோகம் செய்யப்படுவதாக வேளாண்மை இணை இயக்குநர் தமிழ் செல்வி தெரிவித்துள்ளார்.
அவர் அறிக்கை:
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் சார்பில் சிறு தானிய திட்டத்தின் கீழ், சோளம் விதை ஒரு கிலோ ரூ.30 க்கு மானியத்தில் வழங்கப்படுகிறது.ஆத்ம நிர்பர்தா பயறு திட்டத்தில், விவசாயிக்கு, ஒரு எக்டேருக்கு, 20 கிலோ வீதம், கிலோவிற்கு ரூ.60 மானியத்தில் விநியோகிக்கப்படுகிறது. நிலக்கடலை விதை ஒரு எக்டேருக்கு, 150 கிலோ வீதம், ரூ.125 மானியத்தில் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், மிக நீள் இழையுள்ள பருத்தி விதைகள் 30 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. நிலக்கடலை பயிருக்கு தேவையான இடுபொருட்களான உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனஸ் போன்ற உயிரியல் கட்டுப்பாடு காரணிகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்து, வட்டார விரிவாக்க மையங்களுக்கு நேரில் சென்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
