/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் வருகையையொட்டி குவாரிகளுக்கு விடுமுறை
/
பிரதமர் வருகையையொட்டி குவாரிகளுக்கு விடுமுறை
ADDED : நவ 20, 2025 02:40 AM
கோவை: பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து, நேற்று கோவையிலுள்ள 110 குவாரிகளுக்கும், 180 கிரஷர்களுக்கும் விடுமுறை விடப்பட்டது.
கோவையில் நடந்த தென்மாநில இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயிகள் மாநாடு கோவையில் நடந்தது. பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பிரதமர் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக, நேற்று ஒரு நாளைக்கு குவாரிகளில் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பது, வெடிபொருட்களை கையாளும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று, மாவட்ட கனிமவளத்துறை அறிவுறுத்தியது.
அதனடிப்படையில், கோவையை அடுத்த காரமடை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலுார் தாலுகாக்களுக்குட்பட்ட பகுதிகளில் கல்லுக்குழி என்றழைக்கப்படும், 110 குவாரிகளிலும் வெடிபொருட்கள் வைத்து பாறைகள் தகர்க்கப்படக்கூடாது, வெடிபொருட்களை கையாளக்கூடாது என கூறி, விடுமுறை அறிவிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி, நேற்று குவாரிகளில் வெடிபொருட்கள் பயன்படுத்தப்படவில்லை, அதே சமயம் கிரஷர்களிலிருந்து, கல்லுக்கால்கள், ஜல்லி, போல்டர், சோலிங் என்றழைக்கும் சிறிய பாறை கற்கள், பேபிஜல்லி, எம்.சேண்ட் மற்றும் பி.சேண்ட் ஆகியவை கட்டுமானப்பணிகளுக்காக கட்டுனர்களுக்கு வினியோகிக்கப்படாமல் நிறுத்தப்பட்டன.

