/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' பட்டம் இதழ் சார்பில் வினாடி- வினா போட்டி ஆரம்பம்
/
'தினமலர்' பட்டம் இதழ் சார்பில் வினாடி- வினா போட்டி ஆரம்பம்
'தினமலர்' பட்டம் இதழ் சார்பில் வினாடி- வினா போட்டி ஆரம்பம்
'தினமலர்' பட்டம் இதழ் சார்பில் வினாடி- வினா போட்டி ஆரம்பம்
ADDED : அக் 10, 2025 10:51 PM

கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ்.கல்வி குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' எனும் மெகா வினாடி-வினா போட்டி, கோவைப்புதுாரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.
மாணவர்களின் மொழியறிவு, அறிவியல், கணிதம், சமூக அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட திறன்களை மேம்படுத்தும் நோக்கில், பட்டம் இதழ் வெளியிடப்படுகிறது.
இதைத்தொடர்ந்து வாசிக்கும் மாணவர்களின் கற்றல், நுண்ணறிவு திறன்களை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுபடுத்தும் வகையில், 2018 முதல் வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.
இந்தாண்டுக்கான துவக்கப்போட்டி, கோவைப்புதுார் ஆஸ்ரம் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கோ-ஸ்பான்ஸராகவும், சத்யா ஏஜன்சீஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை, கிப்ட் ஸ்பான்சர் ஆகவும் இணைந்துள்ளன.
மூன்று சுற்றுகள் நேற்று நடைபெற்ற தகுதி சுற்றில், 550 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவியர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இறுதி போட்டியில், 'டி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி வர்த்திகா மற்றும் ஏழாம் வகுப்பு மாணவி சமிக்சா ஆகியோர் முதல் பரிசு வென்றனர்.
இறுதி போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள், சான்றிதழ்களை ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி தாளாளர் தேவேந்திரன், நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்திரன் மற்றும் முதல்வர் சரண்யா வழங்கினர்.
3 மாவட்ட பள்ளிகள் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் வினாடி-வினா போட்டியில் பங்கேற்கின்றனர்.
முதலிடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படுவர்.
அதில் இருந்து தேர்வாகும் எட்டு அணிகளுக்கான இறுதிப்போட்டி, ஒரே இடத்தில் நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
'பட்டம் இதழால் உதவி' பட்டம் இதழ், பாடப்பகுதிகளைப் புரிந்து கொள்வதற்கும், வாசிப்பை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது. சில கேள்விகள் கடினமாக இருந்தாலும், இதழ் வாசிப்பு எனக்கு உதவியாக இருந்தது. எதிர்வரும் போட்டிகளில் தேசிய, சர்வதேச செய்திகள் குறித்து அதிகம் கவனம் செலுத்துவேன். -மாணவி சமிக்சா
'நுண்ணறிவு திறன் வளர்க்கும்' பட்டம் இதழை தொடர்ந்து வாசிப்பதால், பல கேள்விகளுக்கான பதில்களை எளிதாக சொல்ல முடிந்தது. இதழில் பாடம் சார்ந்ததும், பொது அறிவு சார்ந்தும் பல தகவல்கள் கிடைக்கின்றன. அடுத்த போட்டிகளில் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தவுள்ளேன். -மாணவி வர்த்திகா
பட்டம் இதழ், பாடப்பகுதிகளைப் புரிந்து கொள்வதற்கும், வாசிப்பை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது. சில கேள்விகள் கடினமாக இருந்தாலும், இதழ் வாசிப்பு எனக்கு உதவியாக இருந்தது. எதிர்வரும் போட்டிகளில் தேசிய, சர்வதேச செய்திகள் குறித்து அதிகம் கவனம் செலுத்துவேன். -மாணவி சமிக்சா
'மொழியறிவை மேம்படுத்தும்'
மாணவர்களின் மொழியறிவை மேம்படுத்துவதில், பட்டம் இதழ் முக்கிய பங்காற்றுகிறது. இதைத்தொடர்ந்து வாசிக்கும் மாணவர்கள் எழுத்துப்பிழை இன்றி எழுதுகிறார்கள். பாடப்பகுதிக்கு அப்பாற்பட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, அறிவு பெறுவதற்கும் இத்தகைய இதழ் ஒரு சிறந்த வழி. வினாடி-வினா போட்டிகள் மாணவர்களிடம் கற்றலுக்கான ஆர்வத்தை மேலும் துாண்டுகின்றன. -கவுரி உதயேந்திரன் நிர்வாக இயக்குனர், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி