/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்; ஒரு லட்சம் ஊசி செலுத்த திட்டம்
/
தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்; ஒரு லட்சம் ஊசி செலுத்த திட்டம்
தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்; ஒரு லட்சம் ஊசி செலுத்த திட்டம்
தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்; ஒரு லட்சம் ஊசி செலுத்த திட்டம்
ADDED : ஏப் 18, 2025 06:33 AM

கோவை; இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நேற்று துவங்கிய நிலையில் மாநகராட்சி பகுதிகளில், 1.11 லட்சம் தெரு நாய்களுக்கு ஆறு மாதங்களில் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வெறிநோய் பாதிப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக, மாநகராட்சி பகுதிகளில் சுற்றும் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட கலெக்டர் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை துவக்கிவைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மாநகராட்சி பகுதிகளில், 1.11 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. வார்டு வாரியாக என்.ஜி.ஓ.,கள் அடங்கிய இரு அணிகள் இப்பணியில் ஈடுபடும். தினமும் குறைந்தது, 200 நாய்களுக்கு தடுப்பூசி என, ஆறு மாதத்துக்குள் அனைத்து நாய்களுக்கும் செலுத்தப்படும்.
தவிர, நான்கு கருத்தடை சிகிச்சை மையங்களில் மாதம் தோறும், 1,200 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. தெருநாய்களால் மக்கள் பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்க, நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கிணத்துக்கடவில் தனியார் பள்ளி மாணவி வெளியே உட்காரவைத்து தேர்வு எழுதப்பட்ட சம்பவத்தில், மாணவியின் தந்தைக்கு மிரட்டல் தொடர்பாக போலீசார் முழு விசாரணை நடத்திவருகின்றனர். தனியார் பஸ்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தால் 'பெர்மிட்' ரத்து போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார். உடன் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி ஆகியோர் இருந்தனர்.