/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூராட்சிகளில் உள்ள தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: பாதிப்பை கட்டுப்படுத்த உள்ளாட்சி அதிரடி
/
பேரூராட்சிகளில் உள்ள தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: பாதிப்பை கட்டுப்படுத்த உள்ளாட்சி அதிரடி
பேரூராட்சிகளில் உள்ள தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: பாதிப்பை கட்டுப்படுத்த உள்ளாட்சி அதிரடி
பேரூராட்சிகளில் உள்ள தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: பாதிப்பை கட்டுப்படுத்த உள்ளாட்சி அதிரடி
ADDED : நவ 03, 2025 10:24 PM

பெ.நா.பாளையம்:  பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு கால்நடை துறை உதவியோடு கருத்தடை, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
கோவை மட்டுமல்லாமல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன.
காரணம், தெரு நாய்கள் எங்கு பிடிக்கப்படுகின்றனவோ, கருத்தடை செய்யப்பட்ட பின்பு அந்த குறிப்பிட்ட தெரு நாயை பிடித்த இடத்திலேயே விடுவிக்க வேண்டும். அப்போது நாய் உயிருடன் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளதால், உள்ளாட்சி அமைப்புகள் தெருநாய்களை பிடித்து, கருத்தடை செய்யும் பணியில் சுணக்கம் காட்டி வருகின்றன.
சாதாரணமாக வீட்டு நாய்கள் வளர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. நாய் வளர்க்க விரும்புவோர் அதற்கான உரிமத்தை உள்ளாட்சி நிர்வாகத்திடம் பெற வேண்டும். உரிமத்தை காலக்கெடு முடிந்த பின் ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும். நாய்களின் உடல் சுகாதாரம், ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாய்களின் இனப்பெருக்கம், ஊட்டச்சத்து, உடல்நலன்கள் ஆகியவற்றை கால்நடை மருத்துவர் வாயிலாக கண்காணிக்க வேண்டும்.
எட்டு ஆண்டுகளுக்கு மேல் உள்ள நாய்களுக்கு உரிமம் வழங்கப்படுவது இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நாய் வளர்போருக்கு உள்ளது. ஆனால் தெரு நாய்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. அவை சாதாரண நாயா அல்லது வெறிநாயா என்பதை உடனடியாக பொதுமக்களால் கண்டறிய முடிவதில்லை.
இதனால் மனிதர்கள் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.
இதே போல நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி மிகவும் முக்கியமானது. இது நாய்கள் மற்றும் அவர்களை சுற்றியுள்ள மனிதர்களை ரேபிஸ் நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை ரேபிஸ் நோயிலிருந்து பாதுகாக்க நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சுகாதார அலுவலர் பரமசிவம் கூறுகையில், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை, 300 நாய்களுக்கு உரிய வழிமுறைகளை பின்பற்றி, ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கருத்தடை செய்யப்படும் தெருநாய்கள் எங்கே பிடிக்கப்படுகிறதோ, கருத்தடைக்கு பின்பு அங்கே விட்டு செல்வது உறுதி செய்யப்படுகிறது. மேலும், இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தி ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தால், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.

