/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் பயனர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
ரயில் பயனர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 19, 2026 06:10 AM

போத்தனூர்: போத்தனூர் ரயில் பயனர்கள் சங்கம், போத்தனூர் வியாபாரிகள் நலசங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பொது செயலாளர் சுப்ரமணியம் தலைமையில் நடந்தது.
இதில், போத்தனூரில் கோயம்புத்தூர்,- மங்களூர், எர்ணாகுளம் - காரைக்கால், எர்ணா குளம் - பெங்களூர் எகஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமேஸ்வரம், தூத்துக்குடி, போடிநாயக்கனூர், கொல்லம் போன்ற பகுதிகளுக்கு மீண்டும் ரயில்களை இயக்க வேண்டும். பஸ்களை போத்தனூருக்கு இயக்க வேண்டும். ரயில் கல்யாண மண்டபத்திலிருந்து நஞ்சுண்டாபுரம் வரையிலான சாலைகளை, நான்கு வழி சாலைக ளாக மாற்றவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வியாபாரிகள் சங்க தலைவர் லோகனாதன் உட்பட, 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

